' சோறு மட்டும் போதுமா ' ' செ.சீனி நைனா முகமது ' தமிழனென்று சொல்வதென்றால் தமிழை ஒதுக்கித் தள்ளாதே ! - நீ தமிழை ஒதுக்கித் தள்ளாதே !- இன்பத் தமிழுனக்கு வேண்டாமென்றால் தமிழனென்று சொல்லாதே ! - உன்னைத் தமிழனென்று சொல்லாதே !!!! மொழிகட்கெல்லாம் அன்னையான முன்னைமொழி தமிழடா - அது உன்னை ஊக்கும் அமுதடா - அதை இழிவென நீ எண்ணி விட்டால் இழிந்திடும் உன் தரமடா - மெல்ல அழிந்திடும் உன் இனமடா !!!! எலிகள் கூட கீச்சுக்கீச்சு மொழியைமாற்ற வில்லையே - அவை இரவல் வாங்க வில்லையே - பெரும் புலியைப் போல துள்ளும் உனக்கு மொழியின் மானம் இல்லையா ? நீ முகமில்லாத பிள்ளையா ??? சோறு போடும் மொழிகளெல்லாம் சொந்தமொழி ஆகுமா ?? - உனக்குச் சோறு மட்டும் போதுமா ?? - நிலை மாறும்போது தாயைக்கூட மாற்றிக்கொள்ளத் தோன்றுமா ?? - தன் மானம் உனக்கு வேண்டுமா ??? |
No comments:
Post a Comment