Wednesday, 18 December 2013

மகாத்மா காந்தியின் செந்தமிழ் செல்வி இலக்கியா !!!!

இலக்கியா ஜெயராமன் எனும் இம்மாணவி பெயருக்கு ஏற்றாற்போல தமிழ் இலக்கியத் துறையில் வியக்கத்தகு பல  சாதனைகளையும் பரிசுகளையும் வென்று குவித்து வருகிறாள். "மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது" என்பதனாலோ என்னவோ இப்பாவை இளவயதிலேயே பல தமிழறிஞர்களும் தமிழ்நாட்டின் பேராசிரியர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் வியக்கும் வண்ணம் சாதனைப் புரிந்து வருகிறாள். தமிழ் ஆர்வளர்களும் தமிழ் அறிஞர்களும் கூடியிருக்கும் பல அரிய சபையின் நடுவே கிஞ்சிற்றும் அஞ்சாது கம்பீரமாக உரத்த குரலில் இனிமையாக படைத்து வருகிறாள்.
 
இவரது படைப்பினை கண்டுஇன்னும் பல நாடுகளின் கூட்டங்களுக்கும் தமிழ் மாநாடுகளுக்கும் தமிழர் வாழ் நாடுகளுக்கும் அழைக்கப் படுகிறார். தமிழ் ஆர்வலர்கள் கூடியிருக்கும் சபைகளில் கோப்பைகள், மாலைகள், பாராட்டுச் சான்றிதழ் என அளிக்கப்பட்டு கௌரவப் படுத்தப் படுகிறாள். இச்சாதனைச் செல்வியை மாணவராகக் கொண்டிருக்க மகாத்மா காந்தி கலாசாலை பெருமைப்படுகிறது. இவரது திறமையை வெளிக்கொணரச் செய்த மாதா பிதா குரு தெய்வத்துக்கும் கோடான கோடி நன்றி மலர்கள் உரித்தாகுக. இப்பள்ளியின் தலைமையாசிரியராக இம்மாணவியைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இம்மாணவியை உருவாக்கிய இப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் நன்றிகள். வளர்க செழிப்புடன்! வாழ்க வளமுடன்! ஓங்குக தமிழ்த்தொண்டு! 
 
             PELAJAR YANG BERNAMA ELAKIYA A/P JAYARAMAN MEMPUNYAI BAKAT TERSENDIRI DALAM BIDANG KESUSASTERAAN TAMIL. BAKAT BELIAU DIRESTUI OLEH YAB.MENTERI BESAR PERAK DARUL RIDZUAN.BELIAU BERBAKAT MELAFAZKAN IKRAR SATU MALAYSIA DAN LAGU NEGARAKU DAN RUKUN NEGARA DALAM EMPAT BAHASA IAITU BAHASA TAMIL,BAHASA MALAYSIA,BAHASA CINA DAN BAHASA INGGERIS, BELIAU TELAH MENDAPAT  JEMPUTAN TETAMU KHAS KANAK-KANAK UNTUK MEMPERSEMBAHKAN KEBOLEHAN BELIAU DI PENTAS BERTARAF ANTARABANGSA. NEGARA-NEGARA YANG YANG PERNAH DILAWATI ADALAH SEPERTI MALDIVES,FIJI,INDIA TAMILNADU DAN MAURITIUS.
         BANYAK NGO PECINTA KESUSATERAAN DALAM NEGARA KITA JUGA TELAH MEMBERI BANYAK PENGHARGAAN. SAYA SEBAGAI GURU BESAR AMAT BERTERIMA KASIH KEPADA IBUBAPA DAN GURU-GURU YANG MEMBENTUK BELIAU.BELIAU ADALAH MUTIARA MGK. J.ELAKIYA.....SYABAS....VALGA VALAMUDAN VALARGA SEZHIPPUDAN..... ANBUDAN  .WARGA GANDHI.








No comments:

Post a Comment