மாணவர்களே...
நீங்களும் இவர்களைப் போல்..
நீங்களும் இவர்களைப் போல்..
எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.
வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.
செயலில் அல்ல ?
வாழ்க்கையின் எந்தத் துறையிலும்
ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும்
வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன.
(ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
எண்ணங்களில் கவனமாக இருங்கள் -
அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -
அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -
அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
சொல்லுக்கும்,செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்.
பிறரது உதாசீனம் பிறரது அவமானச்சொல் -
சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்.
அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது.
துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.
(சாலமன்)
சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே
சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி.
(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 ? 400 கி.மு)
பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை
"மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.
மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டு அழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில் உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.
ஓ.மில்லர்.
கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.
(ப்ராங்க்லின்)
மரணமும், வார்த்தைகளும், வரிகளும்,
தவீர்க்க முடியாதவை.
(ஹாலிபர்ட்டன்)
பொய்யான சொற்கள் தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது.
(சாக்ரடீஸ்)
சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.
அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது.
(மகாத்மா காந்தி)
வார்த்தைகளில் மென்மையும்,
வாதத்தில் அழுத்தமும் தேவை.
பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.
சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத்திரும்ப சொல்லப்படும் போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனித சக்தியை வடித்துவிடுபவை.
மெழுகுவர்த்தி சிந்தனைகள் -தீப்பந்த வார்த்தைகள்.
மனிதனுடைய இதயக் குமறலே,
அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.
சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை,
நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.
(அராபிய நாட்டுப் பழமொழி)
கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,
காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,
ஓசைகளும் நம்மையறியாமலேயே
நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன.
பதிந்து நமக்குத் தெரியாமலேயே
நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன.
( மனோதத்துவம்)
பிறருடைய வார்த்ததைகள் -
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது.
நீங்கள் அனுமதித்தாலொழிய.
சொற்களை எண்ணிக்கை போடக்கூடாது.
எடைதான் போட வேண்டும்.
சொற்கள் -
தேனீக்களைப் போன்றது.
அவைகளில் தேனும் உண்டு.
கொடுக்கும் உண்டு.
மென்மையான ஒரு சொல் இதயவாசலைத் திறக்கிறது.
உணர்வதை நாம் செய்வோம்.
சொல்வதை நாம் உணர்வோம்.
(செனிகா)
காலம் போகும்.
வார்த்தை நிற்கும்.
அறிவுள்ள மனிதனுக்கு ஒரு சொல் போதும்
தொகுப்பு,திரு. வீரமுத்து சின்னதம்பி B.Ed(Hons), M.Ed(USM) தலைமையாசிரியர்,
நல்ல கவிதை வாழ்துக்கள் ஐயா
ReplyDelete